கன்னட சாளுக்கியன் தான் முதலாம் குலோத்துங்கச் சோழன். காவிரி சிக்கல் குடகு நாட்டை சுற்றியுள்ள கன்னட நாடு, கொங்கு நாடு, சோழ நாடுகளின் சிக்கல்.
பாண்டியர் மதுரைக்கு இடர் வந்த போது படையெடுத்து வந்து மீட்டவன்: குமார கம்பண்ணன். இவை முன்னர் நிலவிய திராவிட நாட்டின் நற்கூறுகள்.
இவையனைத்தும் கால்டுவெல்லின், தமிழில் கிளைத்த தெலுங்கு கன்னட மொழி ஆய்வில் உதித்த, நவீன திராவிட கருத்தியலால் குலைந்தன.
இன்றளவும் கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய புனைவைச் சொல்லி தமிழ்த் தேசிய வியாதிகள், மலையாள – கன்னட – தெலுங்கு மக்களை மட்டம் தட்டிக் கொண்டு திரிவதை பார்க்கலாம்.
இவையனைத்திற்கும் அங்கிருக்கும் மாநிலக் கட்சிகளானாலும் சரி, தேசியக் கட்சிகளானாலும் சரி தமிழகத்திற்கு எதிராக ஸ்டண்ட் அடிக்க வேண்டியிருக்கு.
தமிழ்நாட்டில் கோலோச்சுவது திராவிட கட்சிகள் தானே? ஏன் கன்னடர்கள் திராவிடர்கள் இல்லையா? இனவிணக்கம் பேசி காவிரியில் தண்ணீர் கொண்டு வர வேண்டியதுதானே?
அப்போ தமிழர் இயக்கம், தமிழர் முன்னேற்றக் கழகம், அண்ணா தமிழர் முன்னேற்றக் கழகம் என்று பெயரையாவது மாற்றிக் கொள்ளலாமே? அங்கே முளைக்க முடியாது திராவிட முன்னொட்டு மட்டும் இன்னும் எதற்கு?
திராவிடக் கட்சிகளின் வேஷம் களைக்கும் நேரம். முந்தைய திராவிட நற்கூறுகளின் அடிப்படையில் உறவுகளை சீர் தூக்க வேண்டிய காலம். அதற்கு தேசிய ஜனநாயகக் கூட்டணியை தேர்வு செய்து நதிகளை இணைக்க நெருக்கடி கொடுத்து சாதித்துக் கொள்ளும் தருணம்.
செய்தி: http://indianexpress.com/article/india/politics/modi-in-tn-jaya-first-time-targets-bjp/