வேவில் விந்தையென்ன?

தகவல் திருட்டு

இதுவும் அமேரிக்கா வழியே வருகிறதென்பது சரிதான்!

அமேரிக்கா அரசு, அமேரிக்க நிறுவனங்களின் மூலம் வேவு பார்க்கிறதா இல்லையா என்பது பிரச்சனையே அல்ல. அமேரிக்க நிறுவனங்கள் – உலகை சந்தையாக்கி வளைத்துப் போட்டு காசாக்க – எதையும் செய்து தரும் அமைப்பே அமேரிக்க அரசு.

இத்தகைய நிறுவனங்களிடமிருந்து அமேரிக்க அரசை மீட்க அம்மக்கள் முன்வர வேண்டும். எதிர்கால உலகின் நலனே இதில்தான் இருக்கிறது.

ஆனால் இம்மக்களில் பலரோ அரசாங்கத்திடம் உரிமையை நிலைநாட்டிவிட்டு கைநிறைய கிடைக்கும் மாதச் சம்பளத்திற்காக சொன்ன வேலையைச் செய்துகொண்டும் இத்தகைய நிறுவனங்களிடம் உரிமைகளை அடகு வைத்துவிட்டும் ஜாலியாக வாழ்கிறார்கள்! 😉

தங்களுக்காக உலகைப் பிடித்துத் தர வேவு பார்க்க இந்நிறுவனங்கள் இடம் அளிக்காது இருந்தால் தான் ஆச்சரியம். பதற்றம் எதுவும் படாது கட்டற்ற மென்மத்திற்கு மாறுவது ஒருவித ஆறுதல். விவரங்களுக்கு http://prism-break.org பாருங்கள். 😉

என்ன சொல்லப் போகிறாய்?