முதலே உலகு?

மார்க்ஸ் ஏஞ்சல்ஸ் லெனின்

மார்க்ஸ் ஏஞ்சல்ஸ் லெனின்

அரசாங்கம் தொழிலில் ஈடுபடக்கூடாது என்பது எவ்வளவு தேவையோ அவ்வளவு தேவை வியாபாரம் அரசில் ஈடுபடக்கூடாது என்பதும். ஆனால் அப்படி இல்லை. வியாபாரம் தனக்கு வேண்டியதை சாதித்துக் கொள்ள அரசையே நடத்த பல இடங்களில் குறுக்கிடுகிறது. அவை அனேகமாக கார்ப்பரேட் வடிவில் இருக்கின்றன.

கர்நாடகா ஐ.டி அமைச்சர் எஸ். ஆர். பாடில் நியமன விவகாரத்தில் முன்னாள் இன்போசிஸ் அதிகாரி டி. வி. மோகன்தாஸ் பாய் உள்ளிட்டோர் குமுறியிருந்தனர். நியமிக்கப் பட்ட அமைச்சர் வயதானவர். அவரால் அமேரிக்க-ஐரோப்பிய முதலீடுகளை ஈர்க்க முடியாது என்றெல்லாம் ஒலே புலம்பல். ஏன்?

ஓட்டுப் போட்ட மக்களைக் காட்டிலும் நோட்டு கொண்டு வருபவரை லாபி செய்து ஈர்க்கக் கூடியவராய் இருக்க வேண்டுமாம் கன்னட ஐ.டி அமைச்சர். இதைச் செய்வதே அவரது முன்னுரிமையென்றால் பெங்களூரைத் தாண்டி கர்னாடகத்தை ஐ.டி மயம் ஆக்குவது அத்துறை அமைச்சருக்கு எத்தனையாவது பணி?

இத்தகைய மனநிலை மிகப் பெரிய சுரண்டலுக்கு வழி வகுத்திருக்கிறது.

ஊர், மாநிலம், சாதி, சமயம், மொழி, பால் முதலியவை பார்க்காத பேருள்ளம் படைத்து, முதலை கடவுளாக ஏற்றுக்கொண்டு அதனிடம் உரிமைகளை விட்டுக்கொடுக்கத் தயாராய் இருப்போருக்கு, வேலை கொடுத்து வளமாய் வாழ வைப்பதாய் சொல்லிக்கொண்டு மறுபுறம் மேற்கொள்ளப்படுவதோ மிகப்பெரிய சுரண்டல்கள்.

மாவோயிசம் போன்றவை இன்னொரு திக்கில் இத்தகைய சுரண்டல்களைக் காட்டி வேறு வகையில் சுரண்ட நினைக்கும் சக்திகளின் ஆதரவுடன் தலையெடுக்கின்றன என்பது மறுக்க முடியாத கூற்று. இரெண்டு சுரண்டல்களுக்கும் இடையே சிக்கிக் கொண்டிருப்பது நாம்தான்.

அரசும் அரசியலில் முனைந்து ஈடுபடுவோரால் அமைய வேண்டும். தொழில்களும் அரசால் மேற்கொள்ளப்படக் கூடாது. வழி? ஆமாச்சுயிசம்? 😉

என்ன சொல்லப் போகிறாய்?