எழுதறேன், மறுபடியும்..

எழுதப்போறேன்! எழுதப்போறேன்! எழுதப்போறேன்!

எழுதப்போறேன்!

http://blog.amachu.net, http://enblog.amachu.net, http://twitter.com/aamachu ஆகிய தளங்களில் எழுதினைப் பார்த்து தெரிஞ்சுக்கலாம், நான் ரொம்பவே துவிட்டச் சோம்பேறியாய் போனக் கதையை.

செய்திகளுக்கு ரியாக்ஷன் கொடுப்பது. அதனோடு என்னுடைய கருத்துக்களை குழைத்தடிப்பது போன்ற காரியங்களே பெரும்பாலும் செய்து வந்திருக்கின்றேன். சர்காஸ்டிக் ரியாக்ஷன்ஸ் கொஞ்சம் அதிகம்.

சோதனைகள் அதிகம் நிறைந்த ரெண்டாண்டுகள் கடந்தாச்சுன்னுதான் நினைக்கறேன். அவ்ளோ சவால்கள் நிறைந்திருந்நதும் கைகொடுக்கும் கட்டற்ற மென்மம் பதிலுக்கு கைகொடுக்கிறது. ஆமாச்சு என்ற பெயரில் தனியுரிம கட்டற்ற மென்மப் பணிகள் மேற்கொள்ளும் நிறுவனத்தை கடந்த நவம்பர் தொடங்கி நடத்தி வருகிறேன். ஓபன்ஈஆர்பி பணிகள் மேற்கொள்கிறேன்.

அண்ணா பல்கலைக் கழகம் முதன் முதலாய் கொண்டு வந்துள்ள கட்டற்ற மென்மப் படிப்பில் பாடம் எடுக்கிறேன். முழுக்க முழுக்க இணைய வழியில். குடும்பம் குழந்தை. வேறென்ன வேணும் வாழ்வை இடைவெளி இல்லாமல் நகர்த்த.

நம்ம பகுதியில் யாரும் செய்து காட்டிய பெரிய முன்மாதிரி இல்லாத கட்டற்ற மென்மத் தொழிலை, நோக்கங்கள் சிதையா வண்ணம் மேற்கொள்ள முனைந்து, சில வழிகளைக் சில ஆண்டுகள் கையாண்டு பார்த்தால் உகந்தாக ஒரு வழிப் பிறக்கும்னு நினைச்சு மேற்கொண்ட முந்தைய முயற்சிகள் பெரிதாய் எழவில்லை. எழுந்திருந்தால் தான் அதியசம்.  அவற்றின் விளைவே ஆமாச்சுவும் நான் மறுபடியும் நிரலெழுதத் தலைபட்டுள்ளதும். அவை தந்த அனுபவங்கள் நிறைய. வாய்ப்பு வரும் போதெல்லாம் சிறிது சிறிதாய் எழுதுவேன்!

அரசியல் அதிகம் இடறுகிறது. குடும்பஸ்தன் வேற. எப்பப்போன்னு சொல்லாம அப்பப்போ எழுதுவேன். நினைக்கும் விஷயங்களைப் பற்றி. 😀

என்ன சொல்லப் போகிறாய்?