பார்த்த முதல் நாளே!

ஒரு குழந்தைக்கு ஒரு மடினி பணித்திட்டம்.

ஒரு குழந்தைக்கு ஒரு மடினி பணித்திட்டம்.

பார்க்கத் தொடங்கும் நாள் முதலாய் கணினி மடினிகளை பார்த்துப் பழகும் பிள்ளைகளின் காலத்தில் அதில் தென்படும் மொழி (ஆங்கிலம்) பள்ளிக்கு போகும் முன்பே பெற்றோரால் கற்பிக்கப் பட வேண்டிய மொழியாய் விளங்குகிறதுன்னு சொல்லாம அஞ்சாங் கிளாஸ் வரை தமிழ், அப்பறம் இங்கிலிஷ், அப்பறம் கொஞ்சம் இந்தி, முடிஞ்ச வரைக்கும் சமஸ்கிருதம்னு ஆளாளுக்கு நிறையபேர் நீட்டிக்கிட்டே போறாங்க. கல்லூரி படிச்சு முடிச்ச கையோட தமிழை கைகழுவுவதே சரிங்கற தொனியில் பரிந்துரைகள் வீசப்படுகின்றன. இதுல இங்கிலீஷே கூடாதுன்னு வேற கூப்பாடுகள்! எப்படி முடியும்?

தீர்வாய், தமிழ் விசைகளும் முகப்பையும் தாங்கி கணினி மடினிகளை தயாரிக்க ஆயிரம் முன்பதிவுகளும் தலா 1000 ரூபாயும் தேவைப்படுகிறது. தாய் மொழிக் கல்வி ஆதரவாளர்கள் திரட்டித் தந்தால் ஓராண்டில் டெபியனை ஆதாரமாகக் கொண்ட இருபதாயிர ரூபாய் மதிப்புள்ள அம்சமான தமிழ்க் கணினி செய்து கொடுக்கலாம். பாக்கி பணம் வருஷக் கடைசியில் கொடுக்கலாம். கொடுத்த ஆர்டர் திரும்பப் பெற முடியாது. அதுக்கப்பறம் தாய் மொழி வழி கல்விக்கான தற்கால ஆதாரம் இருக்கும். இன்றைய பச்சிளம் தமிழ்ப் பிள்ளைகளின் தேவையாய் வேறென்ன இருக்க முடியும்?  😀

அம்மா கற்சிலை வைக்க கொடுக்கப் போற நூறு கோடி காசுல ஒரு மாச வட்டியை வாங்கிக் கொடுத்தாலும் சரி. பிறந்த பிள்ளைகள் பார்க்கும் போதே தமிழாலான கணினிகளை முதலில் கொடுக்க வேண்டிய காலம் இது. ஆறு மாசத்திலேயே அறிய வேண்டிய மொழியாய் ஆங்கிலம் வீட்டுக்குள் இருக்க வீண் ஜம்பம் எதற்கு? இங்கிலிஷ் தெரியலைன்னா கத்துக்கிட்டு பசங்களுக்கும் சொல்லிக்கொடுத்து ஸ்கூல்க்கு அனுப்பற வழியைப் பாருங்க!

கனவு மெய்ப்பட வேண்டும். கைவசமாவது விரைவில் வேண்டும்!

என்ன சொல்லப் போகிறாய்?