திராவிடர்கள்?

எங்கிருந்தோம் | எப்போது வந்தோம் | யார் நாம்

எங்கிருந்தோம் | எப்போது வந்தோம் | யார் நாம்?

திராவிடர்கள் எந்த இடத்தை பூர்வீகமாய்க் கொண்டவர்கள்? விந்திய மலைக்கு தெற்கே இருக்கும் இன்றைய திராவிட பகுதிகளா? அதையும் தாண்டி கடலில் கலந்த குமரிக் கண்டமா?

குமரிக் கண்டம்னா அதுக்கு முன்னாடி இப்போயிருக்கும் திராவிட நாட்டில் வாழ்ந்தோர் யார்? அவர்கள் பேசிய மொழிகள் என்ன? குமரிக் கண்டத்திலிருந்து வந்தவங்க அந்த மொழிகளை என்ன செஞ்சாங்க?

இது ரெண்டுமே கிடையாது. திராவிட கலாச்சாரம் சிந்து சமவெளி கலாச்சாரமா? விந்தியத்திற்கு மேற்கே அங்கே திராவிட இனம் செழித்திருந்த போது தெற்கேயும் திராவிடர்கள் தான் இருந்தார்களா?

ஆரியம் வந்து தள்ளத் தள்ள மெல்ல மெல்ல இன்றிருக்கும் நாட்டை திராவிடர்கள் அடைந்தார்களா? அப்போ இங்கிருந்தவர்களும் அவர்கள் தானா? இல்லை வேற யாராச்சுமா?

இல்லை இந்தியா பூராவும் திராவிடர்கள் தான் இருந்தார்களா? ஆரியத்தால் அக்காலத் தமிழ்ச் செப்பிய மாயாவதி போன்றோரின் முந்தையோர் இந்தி பேசத் தொடங்கினார்களா? அப்போ இவங்கல மாதிரி வடநாட்டுக்காரங்க இந்தி உள்ளிட்ட மொழிகள் பேசினாலும் ரூட் திராவிடந்தானே? திராவிடர்களோடு திராவிடர்கள் ஐக்கியமாய் இருக்க என்ன சிரமம்?

அதெல்லாம் இல்லை திராவிட மொழிக்குடும்பம் தனிக்குடும்பம்னு கால்டுவெல்லே சொல்லிட்டாருன்னு நாங்க அவருக்கு ஸ்டாம்பு அடிச்சுட்டோம்னா அவரு சங்கதத்தோட நெருக்கம் உடையது என்பதைக் காட்டிலும் ஸ்கைத்தியன் (சித்தியன்) மொழிக் குடும்பத்தோடு நெருக்கம் உடையதாகக் கருதுகிறேன்னு சொல்றாரே? ஸ்டாம்பை திரும்ப பெற்றிடலாமா?

அப்போ திராவிடர்கள் ஈரானியர் வழி வந்தவர்களா? அது ஆரியர் வந்ததாக சொல்லப்படும் இடத்திலிருந்து எம்மாந் தூரம்? நெருக்கமா இருக்கறாப்ல தோணுதே! ஒரு வேளை ரெண்டு பேருமே வெளிலேர்ந்து வந்து அதுக்கு முன்னாடி இந்தியால இருந்த எல்லாத்தையும் அழிச்சிருப்பாங்களோ!

இவ்ளோ கன்சன்சஸ் இருக்கற ஒரே விஷயம் இதுவாத் தான் இருக்கும். சங்க இலக்கியங்கள் ஐம்பெருங்காப்பியங்கள் என எல்லாவற்றிலும் அம்புட்டு ஆதாரம் நிரம்பி வழியும் ஒரே சப்ஜக்ட் இதுதான்.

இவ்ளோ தெளிவான விஷயத்தை வைத்து மேற்கொள்ளப்படும் எந்த காரியமும் உருப்படும். தமிழ்நாட்டு அரசியல் இத்தகைய பகுத்தறிவின்பாற்பட்டது.

என்ன சொல்லப் போகிறாய்?