தமிழுக்கான தற்காலத்திய இலக்கணம்?

ஏய்! நீயெல்லாம் ரெண்டாயிரம் வருஷத்துக்கு முன்னாடி தமிழன் தான்டான்ன வேண்டியது.. அவனே,  தமிழ்ல எழுதி பெரியாளானா.. பொறாமைல

தமிழின் செல்லக்குட்டி

தமிழின் செல்லக்குட்டி

மலையாளின்ன வேண்டியது.. சரி சரி…நான் எழுதற தமிழ் தொல்காப்பியருக்கு புரியுமோ என்னவோ!

இந்த திராவிடர் கழகம் மறைமலையடிகளோட சமரசம் கண்ட பிறகு தானே வள்ளுவர், தமிழை எல்லாம் ஹைஜாக் செய்தது?

இத்தனைக்கும் நாயர் ராயர் எல்லாம் கஷ்டப் பட்டு தொடங்கின நீதிக் கட்சி ஈவேரா [ஈவெரா? ;-)] வின் திராவிடர் கழகத்தோட மெர்ஜ் ஆக, கல்தோன்றி மண்தோன்றா காலத்தே முன்தோன்றிய தமிழை வைத்து, நிறைய பேர் தெலுங்கு கன்னட மலையாளத்தை மட்டம் தட்ட, அந்த மாநிலங்களில் எல்லாம் “தி.கக்கள்” மறுபடியும் பெருசா முளையே விடல. இன்னமும் கிளையும் விடல.

அன்னிக்கு தொடங்கின இம்சைதான். மதுரைக்கு ஒரு இடர்ன்ன உடனே மற்றதை மறந்து படை எடுத்து வந்து மீட்ட கன்னடனும்எல்லாத்தையும் மறந்துட்டு, பதிலுக்கு மொழி மேன்மை பேசிகிட்டு, தண்ணிப் பிரச்சனையை கூட தமிழ்ப் பிரச்சனையாக்கறான்.

எல்லாருக்குமே அப்போ பார்ப்புக்கள் மேல ஏகக் கடுப்பு. வெள்ளைக்காரன் வேற, எங்க பாதிரிமார் ஆஸ்திரேலியா அமேரிக்கா ஆப்பிரிக்காவெல்லாம் போய் என்ன செய்தாங்களோ அதையெல்லாம் வெளியிலேர்ந்து வந்து செய்தவங்கதான் இவங்கன்னு ஆராய்ந்து நிறுவியது வசதியாப் போச்சு. 😉

ஒன்னா சேர்ந்ததும், எந்தந்த சாதி எவ்ளோ சதம், அந்தந்த சாதிக்கு வெள்ளைக்காரன்கிட்ட அவ்ளோ வீதம்னு போராடி பெறத் தான். வேலையை வச்சுக்கிட்டு கொடுத்துக்கிட்டிருந்த வெள்ளைக்காரன் நினைச்சிருந்தா எல்லாருக்கும் நியாயமா, தானாவே கொடுத்திருக்க மாட்டானா?

இத்தனைக்கும் சங்கதத்தோட இசைந்த, தமிழ் இலக்கணம் படைத்தது புத்த மித்திரன். ஸ்பான்சர் செய்தது வீர சோழன் – ஐஎஸ்ஓ தமிழன்.

ஆக காலத்துக்கேற்ற, கற்கால இலக்கணத்தையும் புறந்தல்லாது, ஆங்கிலம் உள்ளிட்ட நவீன சூழலுக்கு இசைந்த தமிழுக்கான தற்காலத்திய (அதுவும் தற்காலிகம்தான்) இலக்கணம் படைக்கப் போவது யார்?

அதுல ஆங்கிலத்து F க்கும் சேர்த்து மெய் எழுத்து 19 ஆக இருக்கணும், பார்த்துக்கோங்க. 😉

நல்ல வேளை நான் எழுத்தாளனே அல்ல. நான் எழுதுவது  தி மண்டுவிலும் அல்ல. 😉

என்ன சொல்லப் போகிறாய்?