தந்தி காட்டும் பாதை…

தந்தி காட்டும் பாதை

தந்தி காட்டும் பாதை

குறுஞ் செய்தி, மின்னஞ்சல் போன்ற நவீனத் தொழில் நுட்பங்களால் தந்தி நுட்பம் போச்சு. நவீனத் தொழில் நுட்பங்கள் பதிப்பை பகிர்வதை எளிமைப்படுத்தும் போது அது தொடர்பான முந்தைய நுட்பங்களும் உரிய நிலை எய்த வேண்டியதுதானே?

கொள்ளை லாபம் பார்க்க ஏன் கற்கால காபிரைட் சட்டங்களை தற்கால பகிர் நுட்பங்களுக்கு பொருத்தி பகிர்வோரை கொள்ளையர்களாய்க் காட்ட வேண்டும்?

வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில்? மாற மனம் வேண்டும். காபிரைட் சட்டங்களின் அரவணைப்பில் வாழ்வதை விடுத்து மாற்றுப் பாதை யோசிப்போம். பயனுள்ள தகவல்களும் அறிவும் அனைவரையும் எளிதில் சென்றடைய வழி திறப்போம். புதியன படைப்போம்.

காலத்துக்கு ஒவ்வாத சாதி, மத, அரசியல் நம்பிக்கைகளை நிலைப்பாடுகளை விட்டொழிக்கவோ தக்கபடி மாற்றியமைத்துக் கொள்ளவோ முடியாதோருக்கும், காபிரைட் போன்ற சட்டங்களை தங்களுக்குச் சாதமாக வளைத்து நிமிர்த்துவோருக்கும் பெரிய வேறுபாடு என்ன?

சாதியும் மதமும் பல ஆயிரம் வருஷம் முந்தையது. காபிரைட் சட்டம் ஒரு இருநூறு முன்னூறு வருஷம் இருக்கும் என்பதா?

என்ன சொல்லப் போகிறாய்?