பார்ப்பனர்/ இந்து நீங்கலா மற்ற சாதி/ மதப்பேரையே சொல்லக்கூடாதுன்னு பெரியார்/ செக்யூலர் பத்வா நீடிப்பதால் நிறைய விஷயம் பேசப்படாமலே நடக்குது!
—–
பிராமணரல்லாதார் –> ஆதிக்க சாதி – தலித் ஆச்சு.
ஆதிக்க சாதி – வன்னியர் / தேவர் / கள்ளர் / நாடார் / கவுண்டர் ஆனாங்க
தலித் இல்லைன்னு தே. கு. வேளாளர் சொல்றாங்க.
தலித்தும் – பறையர் / அருந்ததியர்னு பேசப்படணும்.
இளவரசன் பையன். கோகிலா பொண்ணு.
அதனால அவங்க சாதிலையே கொன்னுட்டாங்களாம்.
—
கடைசில இதுக்கெல்லாம் பகடை பெண்தான்!
—
லவ் ஜிகாத்துன்னு கேரளாவில் பெரிய சிக்கல் உண்டு.
பாகிஸ்தானில் ரெண்டு நாளைக்கு முன்னாடி, நம்மூரு தனுஷ் நடிச்ச படத்தை இந்தி படத்தை, முஸ்லிம் பொண்ணு இந்து பையனை காதலிக்கற மாதிரி எடுத்ததால தடை செய்துட்டாங்களாம்.
http://tribune.com.pk/story/571382/censor-board-bans-raanjhanaa-in-pakistan/
—
செட்டியார் – பிள்ளைமார் – முதலியார் – நாயுடு – மூப்பனார் மத்தவங்களையெல்லாம் விட்டுடல. அப்பறமா பார்த்துக்கலாம்.
நானும் தமிழ்நாட்டை ஏழு வருஷமா சுத்தறேன்.
ஏட்டுக்கும் களத்துக்கும் அவ்ளோ வித்தியாசம்.
பேசுங்க.. வெளியே பேசுங்க. வேற வழியில்லை. அப்போ தான் விடிவு வரும்.
—
காழ்ப்பை கக்க வேண்டாம். தீர்வு வரணும். சாதியெல்லாம் சமூகமாயிடுச்சு. சுமூகமாணும்.
அதை நோக்கி நகரணும்.
—-
சாதிங்கற கன்றாவி இல்லைன்னா வர்க்கம், மதம், மொழி, இனம், நாடு, கட்சி, காபிடல்னு வேற ஏதோவொரு கன்றாவிக்குள்ளத் தான் போயாகணும்.
மனுஷனுக்கு நிறைய விஷயங்களை அடையறத்துக்கு ஏதோ ஒரு அடையாளமும் அதன் மீதுள்ள பிடிப்பும் உந்துதலாக இருப்பது தப்பான விஷயமில்லை.
தனக்கிருக்கிற பிடிப்புதான் மேலான பிடிப்புன்னு சொல்ல வந்து மற்றதை மட்டமாக்கும் இடத்தில் தான் தவறுகிறது.
—-
பத்து நாள் முன்னாடி தோன்றிய கன்றாவிகாரங்க எல்லாம் ஆயிரம் வருஷக் கன்றாவிகளை மடத்தனம்னு சொல்றாங்க.
ஆயிரம் பேர் ஒரு கன்றாவில கூட இருக்காங்கங்கறதுனால மத்த கன்றாவியெல்லாம் மடத்தனம் ஆகாது. க்ரேட்டர் கன்றாவி இன்னும் பெரிய கன்றாவி அவ்ளோதான்.
அவனவன் அவனுக்கு உகந்த கன்றாவியை தேர்வு செய்துக்கறான்.
பதினேழு வருஷப் பாடப் புத்தகங்களுக்கும் யதார்த்தத்துக்கும் தொடர்பு அவ்ளோ கம்மி. அதை வெச்சே பேசினா-பார்த்தா ஒரு பிரயோஜனமும் இல்லை.