1939 காங்கிரஸ் கட்சியின் திரிபுரா மாநாட்டில் காந்தியின் அபிமான வேட்டபாளரான பட்டாபி சீதாராமைய்யாவை நேதாஜி வென்று காங்கிரஸ் தலைவர் ஆனார். தான் முன்னிருத்திய வேட்பாளரின் தோல்வி தனது தோல்வி என காந்தி தமது பதவியைத் துறந்தார். தொடர்ந்து நேதாஜி காங்கிரசில் இருந்து விடுபெற்று நடத்தியவற்றை நாடறியும். தொடர்ந்து காந்தி செய்தவற்றையும் நாடறியும்.
கோவாவில் வரலாறு திரும்புகிறது. இம்முறை நேதாஜியொத்த சூழ்நிலையில் இருக்கும் மோடிக்கு அனைத்தும் நடந்தேற வேண்டும். வித்தியாசம் அவ்வளவுதான்.
அத்வானி காந்தியும் அல்ல – மோடி நேதாஜியும் அல்ல. சூழ்நிலைப் பொருத்தம்.