யுனிட்டி போட்ட உபுண்டுவை 64 பிட் மடிணியில் அமர்த்தியதிலிருந்தே அவ்வளவு தோதாக இல்லை. அதனால மறுபடியும் குநோம் கொண்ட டெபியனுக்கு
மாற முடிவு செய்தேன். மாறியது பலனளித்தது. மடிணி முன்னைவிட துரிதமாக இயங்கிற்று. ஆனால் தமிழ் எழுத்துக்கள் உடைந்து தெரிந்தன.
ஆனால் உபுண்டுவில் இந்தச் சிக்கல் இல்லை. தமிழ் பொலிவுடன் காணப்படும். அதனால மின்னெழுத்துக்கள் விஷயத்தில் டெபியனின் அமைப்பிற்கும் உபுண்டுவின் அமைப்பிற்கும் வேறுபாடு என்னவென்று தேடப் போய் தென்பட்ட பதிவில், fontconfig-cofig என்ற பொதியில் உள்ள அமைப்பு கோப்புக்களை (/etc/fonts) டெபியனில் செலுத்துவதில் தெளிவிருப்பதாய் பதியப்பட்டிருந்தது.
நினைச்சது சரிதான்னு, நானும் அதே மாதிரி செய்து பார்த்தேன். பலன் கிடைத்தது.
என்ன காரணம்னு இப்போதைக்கு பார்க்கவில்லை. பதிவை படிப்பவரில் யாரேனும் ஆராய்ந்து பதில் எழுதலாம். முறையாக டெபியனுக்கு தெரிவிக்கலாம். diff ஆணை கொண்டு அடைவுகளை ஒப்பிட்டு முயற்சி செய்யவும். 😉
டெபியனுக்கு மாற மற்றொரு காரணமும் உண்டு. இப்போதைக்கு சஸ்பென்ஸ்.