அழகிய போதி மரம் : பதினெட்டாம் நூற்றாண்டின் இந்தியத் தற்கல்விமுறை

போதியும் இந்திய போதனைகளும்

போதியும் இந்திய போதனைகளும்

ஐம்பது – நூறு ஆண்டுகளுக்கு முன்னர் இருந்ததைக் காட்டிலும், இன்றைய இந்தியா அதிக எழுத்தறிவற்ற நாடாக இருக்கிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த எனது கணிப்பு வெற்றிகரமாக மறுத்துரைக்கப்படும் என்ற அச்சம் எதுவும் எனக்கு இல்லை. பர்மாவும் கூட அப்படித்தான்.

பிரிட்டிஷ் நிர்வாகத்தினர் இந்தியாவிற்கு வந்த போது இருந்தபடியே அவற்றை கட்டுப்பாட்டிற்கு எடுத்துக் கொள்ளாமல், கடைந்தெடுக்கத் தொடங்கினார்கள். மண்ணைத் தோண்டி வேரைப் பார்க்கத் தலைப்பட்டவர்கள் வேரை அப்படியே விட்டுவிட்டார்கள். அழகிய அம்மரம் அப்படியே பட்டுப் போனது.

கிராமத்துப் பள்ளிகள் பிரிட்டிஷ் நிர்வாகத்தினருக்கு போதுமானதாக இருக்கவில்லை. அவர்களுக்கென்ற திட்டத்துடன் வந்தார்கள். ஒவ்வொரு பள்ளிக்கும் இதெதெல்லாம் இருக்க வேண்டும், இப்படிப் பட்ட கட்டடம் இருக்க வேண்டும் என்றெல்லாம் சொன்னார்கள். அப்படிப்பட்ட பள்ளிகள் இருந்ததே கிடையாது.

பண்டைய பள்ளிகள் தங்களுக்கு அங்கீகாரம் இல்லாத காரணத்தினால் போர்டின் வழிச் செல்ல தலைப்பட்டன. ஐரோப்பிய பாணியில் அமையப்பெற்ற பள்ளிகள் மக்களுக்கு விலையுயர்ந்ததாக இருந்தது. எனவே அவர்களால் ஈடுகொடுக்க முடியாது போயிருக்கலாம். ஒரு பிரிட்டிஷ் நிர்வாகி, அவர்கள் சர்வே எடுத்த இடங்கள் தொடர்பாக விட்டுச் சென்ற புள்ளி விவரம் இதனைத் தெரிவிக்கிறது.

ஒரு நூற்றாண்டிற்குள் இந்த ஜனத்திரளுக்கு கட்டாய ஆரம்பக் கல்வியை நிறைவேற்றக் கூடிய பணியை யாரேனும் ஒருவர் முடித்துக் காட்ட முடியும் என்பதை நான் உறுதியாக மறுக்கிறேன். ஏழ்மை நிறைந்த என்னுடைய இந்த நாடானது இத்தகைய விலையுயர்ந்த கல்வி முறையை தாங்க வல்ல திராணியற்றது.

நம்முடைய நாடானது பண்டைய கிராமப் பள்ளித் தலைமை முறையை மீட்டமைக்க வேண்டும். ஒவ்வொரு கிராமத்தையும் ஆண்கள் பெண்கள் ஆகிய இருவருக்குமான பள்ளியொன்றால் திலகமிட வேண்டும்.

(MAHATMA GANDHI AT CHATHAM HOUSE, LONDON,
OCTOBER 20, 1931)

தொடரும்…

என்ன சொல்லப் போகிறாய்?